செய்துங்கநல்லூரில் குழந்தை ஏசு நர்சரி பள்ளி ஆண்டு விழா நடந்தது.
சப் இன்ஸ்பெக்டர் சதீஸ் தலைமை வகித்தார். விவசாய சங்க தலைவர் குமார், ஊர் தலைவர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார். ஆசிரியை ஜெயா வரவேற்றார். செய்துங்கநல்லூர் ஆர்.சி. பங்கு தந்தை ஆரோக்கிய லாசர் சிறப்புரையாற்றினார். பள்ளி தாளாளர் சகோதரி அமலா, ஆசிரியர்கள் சுகன்யா, மெர்சி உள்பட பலர் கலந்துகொண்டனர். பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை சகோதரி மேரி நிர்மிஷா நன்றி கூறினார்.


