கருங்குளம் பகுதியில் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வேண்டி பாப்புலர் பிரண்ட ஆப் இந்தியா சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது.
செய்துங்கநல்லூர் பஜாரில் நடந்த பிரச்சாரத்துக்கு மாவட்ட தலைவர் பாஸில் சமீர் தலைமை தாங்கினார். ஸ்ரீவைகுண்டம் பகுதி தலைவர் அப்துல் காதர் முன்னிலை வகித்தார். பள்ளியில் மாணவர்களை சேர்க்க துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமீம், இஸ்மாயில், அல்தாப், நவ்சாத், பருவேஷ், கரீம் , சுல்தான், உவைஸ், செய்யது உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதே போல் மியகான்பள்ளி, ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி உள்பட பல பகுதியில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது.