செய்துங்கநல்லூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிசேகம் நடந்தது.
இதையொட்டி அதிகாலை 5 மணிமுதல் 6 மணி வரை கணபதி ஹோமம், 8 மணிமுதல் 9 மணிஅளவில் மகா கும்பாபிசேகம் நடைபெற்றது.
காலை 11 முதல் 12 மணி அவளில் பால் அபிசேகம் மற்றும் மகாஅபிசேகம் நடந்தது. மதியம் 12 மணிக்குமகா தீபாரதனை நடைபற்றது. 1 மணிக்கு அன்னதானம் நடந்தது. முன்னதாக சிலைகள் பிரதிட்சை செய்ய ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. அபிசேகம் செய்ய தீர்த்தம் மற்றும்பால் குடம் எடுத்துவரப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ராமசந்திரன், சுவாமி நாதன் வாத்தியார், சண்முகசுந்தர பூசாரி உள்பட பலர்கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை முருகன் குருசாமி செய்திருந்தார்.