செய்துங்கநல்லூரில் உள்ள சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் 1294 பேர் இந்தி தேர்வு எழுதினர்.
செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் இந்தி தேர்வு நடந்தது. இந்த தேர்வை திருச்சி இந்தி பிரசார சபா நடத்தியது. தேர்வின் தலைமை இயக்குனராக கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் பணியாற்றினார். இந்தி தேர்வுக்கான ஆலோசனைகளை பேராசிரியர்களுக்கு இந்தி பிரசார தேர்வு நெல்லை தலைவர் ராஜகோபால் வழங்கினார். ஒருங்கிணைப்பாளராக சந்திரசேகர், ஜான் செண்பகதுரை, மாரிராஜ் குமார், ஜான்பால், உள்பட பலர் பணியாற்றினர். இந்தி தேர்வான பிரவேசிகா, விசாரத்தில் இரு பிரிவுகளும், பிரவீனில் இருபிரிவுகளிலும் மொத்தம் 5 பிரிவுகளிலும், மாணவ மாணவிகள் 1294 பேர் தேர்வு எழுதினர்.
ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன் தலைமையில் செய்துங்கநல்லூர் பாலிடெக்னிக் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
நெல்லை, பாளை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தேர்வு எழுது வந்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளுக்காக பெற்றோர்கள் பைக், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வந்திருந்தனர். இதனால் செய்துங்கநல்லூர் பரபரப்புடன் காணப்பட்டது.