செய்துங்கநல்லூரில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுமி ஆஷிபாவிற்கு நீதி வேண்டி சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அனைத்து கட்சியை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
செய்துங்கநல்லூர் பஸ்நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கிளைத்தலைவர் செய்யது கனி தலைமை வகித்தார். பாப்புலர் பிரண்ட மாவட்ட செயலாளர் உஸ்மான், முகைதீன் ஜாமியா பள்ளி வாசல் ஜமாத் தலைவர் முகம்மதுஅலி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மோத்தி முஸ்ஸம்பில், கருங்குளம் ஒன்றிய அம்மா மக்கள் கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ராஜ் பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட ஒன்றிய செயலாளர் அப்பாக்குட்டி, கேம்பஸ் பிரண்ட் மாவட்ட செயற்குழு உறப்பினர் அல்தாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா மாவட்ட தலைவர் அஸ்ரப் அலி பைஜி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில கொள்கை பரப்பு துணைச்செயலாளர் தமிழ்குட்டி, பசும் பொன் இரத்ததான கழக நிறுவனர் புதுக்குடி ராஜா, அனைத்திந்திய மாதர்சங்க மாவட்ட தலைவர் குணேஸ்வரி, நாம் தமிழர் கட்சி கருங்குளம் ஒன்றிய செயலாளர் அருண் ஆறுமுகம், ஸ்ரீவைகுண்டம் பாப்புலர் பிரண்ட் டிவிஷன் தலைவர் அப்துல்காதர் உள்பட பலர் கண்டன உரை நிகழ்த்தினர். இதற்கான ஏற்பாடுகளை சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா செய்துங்கநல்லூர் கிளை செய்திருந்தது.