செய்துங்கநல்லூரில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
செய்துங்கநல்லூரில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது மணல் ஏற்றி வந்த லாரியை மடக்கி சோதனை செய்தார். அந்த லாரியை ஓட்டிவந்த ஈரோடு மாவட்டம், சிவகிரி வாழை தோட்டத்தினை சேர்ந்த குழந்தைவேல் மகன் கிருஷ்ண ஆனந்த வசம் முறையான அனுமதி சீட்டு இல்லை. மேலும் திருச்சியில் இருந்து மணல் ஏற்றி வந்ததும் தெரியவந்தது. எனவே லாரியை பறிமுதல் செய்து செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.