தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள நீதிமன்றம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஸ்ரீவைகுண்டத்தினை தலைமையிடமாக கொண்டு தூத்துக்கு மாவட்டம் துவங்கியபோது கட்டப்பட்ட இந்த கட்டிடம் மிகவும் பழமையானது.
இந்த கட்டிடம் மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட உரிமை இயல் நீதிமன்றம் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தினை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணன் மற்றும் அப்துல் குதூஸ் ஆகியோர் ஆய்வு செய்ய வருகை தந்தனர். அவர்கள் கட்டிடத்தினை ஆய்வு செய்தனர். மேலும் புதிய கட்டிடம் கட்டப்பட வேண்டிய இடங்களை ஆய்வு செய்தனர். அதன்பின்னர் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர். பின்னர் மரக்கன்றுகள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன், சார்பு நீதிமன்ற நீதிபதி செல்வம், ஸ்ரீவைகுண்டம் நீதிபதிகள் சரவணகுமார், ஜெயசுதா மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.


