
சென்னை புத்தக கண்காட்சியில் சுவடு பதிப்பகம் வெளியிடும் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய தீதும் நன்றே நாவல் வெளியிடு நடைபெற்றது. சுவடு பதிப்பகம் ஸ்டால் எண் 495 பொன்னி அரங்கத்தில் நடை பெற்ற இந்த விழாவிற்கு சுவடு பதிப்பகம் உரிமையாளர் நல்லு லிங்கம் தலைமை வகித்தார். ஊடகவியாளர் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் நூலை வெளியிட சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச்சங்க பொதுச்செயலாளர் சங்கர் மணி நூலை பெற்றுக்கொண்டார். திரைப்பட இயக்குனர் பாஸ்கர் சக்தி, எழுத்தாளர்கள் பிரபு தர்மராஜ், விஜயலெட்சுமி, திரைப்பட பாடலாசிரியர் முருகன் மந்திரம், நூல் விமர்சகர் ரேணு, டாப் டிவி ராஜா, வனஜா ஆறுமுகபெருமாள், பிரவீன், பனை சதீஸ் உள்பட சென்னை வாழ் மக்கள் நலச்சங்கத்தினர் மற்றும் எழுத்தாளர்கள் வாசகர்கள் கலந்துகொண்டனர்.