முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய
சீவலப்பேரி சுடலை- நூல் விமர்சனம்
பொன் சொர்ணா பதிப்பகம். விலை 125/-
தொடர்ப்பு எண் 8760970002
தென் மாவட்டத்தின் விசேஷம் என்றால் அது சுடலை தெய்வம்தான். அதுவும், நெல்லையில் உள்ள சீவலப்பேரியில் உள்ள சுடலை மிக பிரபலம். சீவலப்பேரிக்கு எப்படி வரலாறும் தொன் மையும் இருக்கிறதோ அதேபோல, அந்த ஊரில் உள்ள சுடலை தெய்வமும் தொன்மை நிறைந்தது. அப்படி, சீவலப்பேரியில் உள்ள சுடலையைப் பற்றிய வரலாறும் ஆய்வும் கொண்ட நூல் இது. இதனை, முத்தாலங்குறிச்சி காமராசு எழுதியிருக்கிறார். உக்ரம், உன்னதம், உத்வேகம் இம்மூன்றும்தான் சுடலை எனச் சொல்லும் நூலாசிரியர், சுடலை தாமிரபரணிக்கு வந்த வாய்மொழிக் கதையையும் இந்நூலில் விளக்குகிறார். சுடலையின் 7 நிலைகள், சுடலையின் தோற்றமும் வரலாறும், சுடலையின் அவ தாரங்கள், சிவபெருமானின் அவதாரம் சுடலை, சுட லையின் புகைப்படங்கள் என சீவலப்பேரியின் காவல் தெய்வமான சுடலை மாடன் பற்றிய பதினான்கு கட்டு ரைகள் அடங்கிய நூலிது. சுடலை தெய்வத்தின் தன் வரலாறு நிறைந்த கதைகளை கூறும் நூல் என்பதால் அனைவரும் வாசித்து மகிழலாம்.
இந்த விமர்சனம் வெளியிட்ட தினகரன் நிர்வாகம் மற்றும் ஆசிரியர் குழு மற்றும் துணை ஆசிரியர் பேராச்சி கண்ணன் ஆகியோருக்கும் மிக்க நன்றி – அன்புடன் முத்தாலங்குறிச்சி காமராசு


