பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழாவையொட்டி பண்டாரம்பட்டி பள்ளிக்கு பொதுமக்கள் சீர்வரிசையுடன் வந்து பிரமிக்க வைத்தனர்.
தூத்துக்குடி பண்டாரம்பட்டி, தூ.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. கல்விக்கண் திறந்த காமராசர் பிறந்தநாள் விழாவை கல்வி வளர்ச்சிநாளாக சிறப்பாகக் கொண்டாடினர். விழாவின் ஆரம்பமாக மாணவர்களின் பெற்றோரும், ஊர் பொதுமக்களும் பள்ளிக்கும் மாணவர்களுக்கும் தெவையான பொருள்களை சீர்வரிசையாக ஊரின் முக்கிய வீதி வழயியாக வலம் வந்தபடி பள்ளிக்கு கொண்டு வந்தனர்.
விழாவிற்கு வட்டாரக் கல்வி அலுவலர் ஜோ.அன்பு தலைமை தாங்கினார். விழாவானது தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமானது. தலைமையாசிரியர் நெல்சன் பொன்ராஜ் பள்ளிக்கு பெற்றோர்கள் கொண்டு வந்த சீர்வரிசைகளைப் பெற்றுக்கொண்டு அனைவரையும் வரவேற்றுப் பேசினார். வட்டாரக் கல்வி அலுவலர் ஜோ.அன்பு, காமராசர் பற்றி சிறப்புரை ஆற்றினார். காமராசர் வாழ்க்கை வரலாறு பற்றிய தொகுப்பு திரைப்படமாக காண்பிக்கப்பட்டது. பின் மாணவர்களின் கலைநிகழ்ச்சியாக பேச்சுப்போட்டி, மாறுவேடப்போட்டி, பாடல்போட்டி. நடனம் ஆகியவை சிறப்பாக மாணவர்களால் நடத்தக்கட்டது.
மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பெல்சிபாய் ஆசிரியை நன்றி கூறினார். நிறைவாக தேசிய கீதம் பாட விழாவானது இனிதே நிறைவு பெற்றது. பள்ளிக்கு பொதுமக்கள் சீர்வரிசையுடன் வந்தது அனைவரையும் பிரமிக்க வைத்தது.


