தூத்துக்குடி மாவட்டத்தில் 2018-2019-ம் ஆண்டிற்கு அக்டோபர் மாதத்தில் இலவச வெள்ளாடுகள் வழங்க பயனாளிகளை தேர்வு செய்ய சிறப்பு கிராம சபைக் கூட்டம்,19 கிராமங்களில் 27.08.2018 அன்று நடைபெற உள்ளது என துாத்துக்குடி மாவட்டஆட்சியர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து துாத்துக்குடி ஆட்சியர் வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது,தமிழ்நாடு அரசு வழங்கும் சிறப்பு திட்டமான இலவச வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தில் 2018-2019-ம் ஆண்டிற்கு அக்டோபர் மாதத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கீழ்க்கண்ட 19 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழ வல்லநாடு, கீழ புத்தனேரி,திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோவங்காடு, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குமரகிரி, ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கச்சானாவிளை, கட்டாரிமங்கலம், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொம்பன்குளம், கொம்மடிக்கோட்டை, திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலதிருச்செந்தூர், உடன்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாநாடு தண்டுபத்து, கயத்தார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கே.துரைசாமிபுரம், கே.சிவஞானபுரம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இனாம்மணியாச்சி, அய்யனேரி, ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கலப்பைப்பட்டி, காட்டுநாயக்கன்பட்டி, புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கந்தசாமிபுரம், கருப்பூர், விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கே.சுந்தரேஸ்வரபுரம்.
இக்கிராமங்களில் பயனாளிகள் தேர்வு செய்திட ஏதுவாக 27.08.2018 அன்று இக்கிராமங்களில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. எனவே இலவச வெள்ளாடுகள் பெற்றிட விரும்பும் பெண் பயனாளிகள் 27.08.2018 அன்று அந்தந்த ஊராட்சி கிராம சபைகளில் கலந்து கொண்டு உரிய விண்ணப்பம் அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.