சின்னம்மாவுடன்சேர்ந்த காரணத்தினால் என்னை பழி வாங்கி விட்டார்கள். மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள் என சுந்தராஜன் உருக்கமாக மக்களிடம் பேசி வாக்குசேகரித்தார்.
அமமுக ஒட்டப்பிடாரம் வேட்பாளர் சுந்தரராஜன் கருங்குளம் ஒன்றிய பகுதியில் வாக்கு சேகரித்தார். அவர் விகோவில்பத்து, நாட்டார்குளம் , கொள்ளீர் குளம், இந்திராகாலனி, வள்ளுவர் காலனி, விட்டிலாபுரம், முத்தாலங்குறிச்சி, அனவரதநல்லூர்,சமத்துவபுரம், ஆழிகுடி , வசவப்புரம் உள்பட பல பகுதியில் பிரச்சாரம் செய்தார். விட்டிலாபுரத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து அவர் பேசினார்.அவர் பேசும் போது கூறியதாவது. என்னை கடந்த தேர்தலில் தொகுதிக்கு உழைக்க வேண்டும் என்பதற்காகவே தேர்ந்தெடுத்தீர்கள் நானும் உற்சாகமாக உழைத்து வந்தேன். இந்த பகுதியில் விரித்தாடும் குடிதண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணவும், விட்டிலாபுரம் மணக்கரை சாலை உள்பட பல சாலைகளை சீர் செய்யவும், குக்கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களை சீர்படுத்தவும்நடவடிக்கை எடுதது வந்தேன். ஆனால் நான் சின்னம்மாவுடன் சேர்ந்து விட்டேன் என்ற ஒரே காரணத்துக்காக என்னை பழி வாங்கி விட்டார்கள். எனது எம்.எல்.ஏ பதவியை அதிகார வர்க்கம் பறித்துவிட்டது. மக்கள் சேவை செய்ய வந்த என்னை பழி வாங்கி கைகளை கட்டி போட்ட காரணத்தினால் எதுவும் செய்ய முடியாமல் போய் விட்டது. இந்த தேர்தலில் எனக்கு வாய்ப்பு தாருங்கள். நான் விட்ட பணிகளை துவக்க ஆணையிடுங்கள் என்று அவர் பேசினார்.
அவருடன் கருங்குளம் ஒன்றிய செலயாளர் சிவசுப்பிரமணியன், மாநில அண்ணா தொழில் சங்கபேரவை பொருளாளர் நெல்லை பரமசிவன், கோட்டபொறுப்பாளர் பொன்னுசாமி, ஆவின் அண்ணாசாமி, மண்டல பொறுப்பாளர் பொன்னையா, சரவணன் உள்பட பலர் உடன் வந்தனர்.