நாகர்கோவிலிலிலிருந்து சாத்தான்குளம், தூத்துக்குடி வழியாக புதுச்சேரிக்கு புதிய அரசு விரைவு பேருந்து இயக்கப்பட்டது.
நாகர்கோவிலிலிருந்து வள்ளியூர், சாத்தான்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, மதுரை, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர் வழியாக புதுச்சேரிக்கு தமிழ்ப் புத்தாண்டு முதல் புதிய அரசு விரைவு பேருந்து இயக்கப்படுகிறது. இப்பேருந்து தினமும் மாலை 6.15 மணிக்கு சாத்தான்குளம் வந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சாத்தான்குளம் அரசுப் போக்குவரத்து பணிமனையில் இருந்து புதிய வழித்தடத்தில் பிரதான ஊர்களுக்கு பேருந்து வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.