சாத்தான்குளம் வட்டம் வறட்சி பாதித்த வட்டமாக அறிவிக்க வேண்டும் என திமுக செயற்குழு கூட்டத்தில் வலிலியுறுத்தப்பட்டது.
சாத்தான்குளம் நகர திமுக செயற்குழு கூட்டத்துக்கு நகர அவைத்தலைவர் மோகன் வகித்தார். ஒன்றிய அவைத்தலைவர் சவுந்திரபாண்டியன், ஒன்றிய துணைச் செயலர்கள் சக்திவேல், சோமசுந்தரி முன்னிலை வகித்தனர். ஒன்றிய திமுக செயலர் ஏ.எஸ். ஜோசப் பேசினார்.
சாத்தான்குளம் பேரூராட்சியில் உள்ள அனைத்து கழிவு நீர் கால்வாய்களையும் முறையாக சுத்தம் செய்வதுடன், இந்த கழிவுநீர் தேங்கும் அமராவதி குளத்திற்கு வரும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் மணல் திட்டுகளை அகற்றி அமராவதி குளத்தை தூர் வார வேண்டும். தொடர்ந்து மூன்றாண்டுகளாக பருவ மழை தவறியதால், சாத்தான்குளம் பகுதி கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. நெடுங்குளம், கோமானேரி, கலுங்குவிளை, கொம்பன்குளம் பகுதிகளில் குளத்து பாசனத்தை நம்பி பயிரிட்ட நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகிவிட்டன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தொடர் வறட்சியால் நிலத்தடி நீரும் வற்றியது. வரும் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாத்தான்குளம் வட்டத்தை வறட்சி பாதித்த வட்டமாக தமிழக அரசு அறிவிக்க மாவட்டஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு பணத்தை உடனடியாக வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நகர துணைச் செயலர்கள் வெள்ளபாண்டியன், கணபதி, பொருளாளர் சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நகரச் செயலர் மகா.இளங்கோ வரவேற்றார். மாவட்ட பிரதிநிதி ல. சரவணன் நன்றி கூறினார்.