
சாத்தான்குளம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில், திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலிலின் பிறந்த நாளை முன்னிட்டு தொழிலாளர் முன்னேற்ற சங்க கொடியேற்று விழா நடைபெற்றது.
சங்கத் தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் சந்திரா, விபத்து பிரிவு வெங்கடேஷ், வர்கீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலர் ஜேசு வரவேற்றார். சாத்தான்குளம் ஒன்றிய திமுக செயலர் ஏ.எஸ். ஜோசப் கலந்துகொண்டு சங்க கொடியேற்றினார்.
இதில், நகர திமுக செயலர் மகா. இளங்கோ, தொழிலாளர் முன்னேற்ற சங்க உறுப்பினர்கள் இம்மானுவேல், முருகேசன், குமரேசன், தாமஸ், ஒன்றிய திமுக துணைச் செயலர் ஆ. பாலமுருகன், மாவட்டப் பிரதிநிதி லெ.சரவணன், முன்னாள் மாவட்டப் பிரதிநிதி இ. கெங்கை ஆதித்தன், தாமரைமொழி ஊராட்சி செயலர் கணபதி பாண்டி, சாமிதோப்பு தாமோதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சங்கப் பொருளாளர் சுதாகர் நன்றி கூறினார்.