சாத்தான்குளம் யூனியன் அலுவலகத்தில் 69வது குடியரசு தினவிழாவுக்கு ஆணையாளர் வேலுமயில் தலைமை வகித்து தேசிய கொடியேற்றினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) ரஞ்சித் முன்னிலை வகித்தார். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாச்சியார். உதவியாளர்கள்ஈஸ்வரி, சண்முகசுந்தரி, டிரைவர்கள் முருகன், நயினார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.சாத்தான்குளம் பேருராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தினவிழாவுக்கு பேருராட்சி செயல் அலுவலர் நாகராஜன் தலைமை வகித்து தேசிய கொடியேற்றினார். இதில் இளநிலை உதவியாளர் அருணாசலமூர்த்தி, சுகாதார மேற்பார்வையாளர்கள் ஜேக்கப்,சுடலை, முன்னாள் 5வது வார்டு கவுன்சிலர் அழகுசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


