சாத்தான்குளம் ராம.கோபால கிருஷ்ணபிள்ளை அரசு பொது நூலகத்தில் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பள்ளி மாணவர்கள் தாய்மொழி காப்போம், தமிழ்மொழியை வளர்ப்போம். தமிழ் மொழியை உலக மொழியாக்குவோம் என உறுதிமொழி எடுத்தனர். இதையடுத்து மாணவர்கள் தமிழ் மொழி புத்தகங்களை வாசித்தனர்.
இதில் நூலகர்கள்,சித்திரைலிலிங்கம், சுப்பிரமணியன், நமச்சிவாயம், சண்முகவேல் மற்றும் நூலகபணியாளர்களர் கலந்துகொண்டனர்.


