
சாத்தான்குளம் சைவ வேளாளர் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு சங்கத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். சங்க கௌரவ தலைவரும், அருள்மிகு காசிவிஸ்வநாதர் விசாலட்சுமி அம்மன் கோயில் தர்மகர்த்தா சண்முகராஜா, சங்க அமைப்பாளர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலர் முருகன் வரவேற்றார்.
கூட்டத்தில், இஸ்ரோ தலைவர் சிவன் பிள்ளைக்கு பாராட்டு தெரிவித்தும், கல்வியாண்டில் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர், மாணவிகளுக்கு, வ.உ.சி. பிறந்த நாளன்று பரிசுகள் வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்கப் பொருளாளர் அழகப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். சங்க துணைத்தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணன் நன்றி கூறினார்.