தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கருமேனி ஆற்றுப்பாலத்தில் இன்று காலை தினத்தந்தி பேப்பர் ஏற்றி வந்த டெம்போ வேன் சாத்தான்குளத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. கருமேனி ஆற்றுப்பாலம் அருகில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பாலத்தின் மீது மோதி கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த ஓட்டுநர் ஹரிகரன் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் விபத்துக்குள்ளான வண்டியை உடனடியாக அப்புறப்படுத்தி போக்குவரத்து பாதிப்பை சரி செய்தார்.
குறிப்பாக காவல்துறையினர் தங்களது அதிகாரத்தை மறந்து சாலையில் உடைந்து சிதறிய வாகனத்தின் கண்ணாடி துண்டுகளை தாங்களாகவே முன் வந்து கையில் துப்புறவு வாரியளால் அப்புறப்படுத்தினர். காவல் ஆய்வாளர் இராமகிருஷ்ணன் உயர் அதிகாரி என்ற பதவியை மறந்து சக காவலர்களுடன் உடைந்த கண்ணாடி துண்டுகளை முழுவதுமாக அகற்றி போக்குவரத்தை மிகவும் துரிதமாக சரி செய்தனர். அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிற காவலர்கள் மத்தியில் சாதாரண மனிதர்களை போல் பொது மக்களின் பாதுகாப்பு நலனில் அக்கறை கொண்டு சேவை செய்தது பொது மக்களை புல்லரிக்க செய்தது.