சாத்தான்குளம் ஒன்றிய சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முதலூரில் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு ஒன்றியச் செயலர் ஜான்ராஜா தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சாலமோன், ஒன்றிய துணைச் செயலர்கள் அருண்குமார், சுடலைமணி, செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலர் தயாளன், மாவட்ட இளைஞரணிச் செயலர் குரூஸ் திவாகரன், மாவட்ட மகளிரணிச் செயலர் ஜெயந்திகுமார் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் , வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமித்து, தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், ஒன்றிய மாணவரணிச் செயலர் ஏசா, ஒன்றிய இளைஞரணிச் செயலர் சங்கர், ஒன்றிய இளைஞரணி துணைச் செயலர் அன்புராஜ், ஒன்றிய மகளிரணிச் செயலர் ரூபி, துணைச் செயலர் மேரி ரெஜிலா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முதலூர் ஊராட்சி செயலர் அருணாசெல்வன் நன்றி கூறினார்.