
சாத்தான்குளம் எஸ்.பி தனிபிரிவு காவலர் முத்துசங்கருக்கு மாவட்ட கலெக்டர் குடியரசு தினவிழாவில் விருது வழங்கினார்.
சாத்தான்குளம் காவல் நிலைய எஸ்.பி தனிபிரிவு காவலராக பணிபுரிந்து வரும் முத்துசங்கர், சாத்தான்குளம் காவல்நிலைய பிரச்னை, பொது பிரச்னைகள் மற்றும் சட்ட ஓழுங்கை பாதுகாக்கும் வகையில் தகவல்களை உடனுக்குடன் மாவட்ட எஸ்.பி. மகேந்திரனுக்கு தகவல் கொடுத்து வந்தார்.இதையடுத்து மாவட்ட எஸ்.பி மகேந்திரன் பரிந்துரையின் பேரில் குடியரசு தினவிழாவில் மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ், காவலர் முத்துசங்கருக்கு விருது வழங்கி கௌரவித்தார். அப்போது மாவட்ட எஸ்.பி மகேந்திரன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.