தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கந்தன் குடியிருப்பைச் சேர்ந்த ஜாண்சன் என்பவரது மகள் மெர்லின் (9). இவர் சாத்தான்குளம் தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று இரவு மெர்லின் வீட்டின் அருகில் இருந்த மரத்தில் ஒருபகுதியும், வீட்டின் அருகில் இருந்த சிமெண்ட் தூணில் ஒரு பகுதியையும் சேர்த்து வேஷ்டியில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக சிமெண்ட் தூண் முறிந்து கீழே விழுந்தது. இதில் கீழே விழுந்த மெர்லின் மேல் சிமெண்ட் தூண் விழுந்தது. இதில் மெர்லின் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் போலிசார் விரைந்து வந்து மெர்லின் உடலை சாத்தான்குளம் அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் ஊஞ்சல் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது தூண் விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.