தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தில் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் பின்புறம் கழிவு குப்பைகளை கொட்டுகிறார்கள். ஊராட்சியிலிருந்து இந்த குப்பைகளை அகற்றாமல் அங்கேயே தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகைக்காடாய் காட்சியளிக்கிறது. பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. அரசு இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக குப்பைகளை அகற்றி திடக்கழிவு மேலாண்மை குப்பைக் கிடங்குகளில் கொட்டி மக்களின் சுகாதார வாழ்விற்கு வழி செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்