இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி மகன் ஜெயக்குமார் (38). கூலித்தொழிலாளியான இவரது நாய்குட்டி ஒன்று இறந்து போனதாம். இதனை அதே ஊரைச் சேர்ந்த ராஜ் மனைவி கலா என்பவது வீட்டுக்கு பின்புறமுள்ள உடைமரம் பகுதியில் போட்டதாக கூறப்படுகிறது. அது தூர்நாற்றம் வீசியதால் அவர், ஜெயக்குமாரை கண்டித்துள்ளார்.
இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த கலா, அவரது சகோதரி பஞ்சு, கலாவின் மகன் சுரேந்தர், அவரது தம்பி முருகேசன் ஆகியோர் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து ஜெயக்குமார் சாத்தான்குளம் காவல் நிலையத்தி்ல அளித்த புகாரின் பேரில் கலா உள்ளிட்ட 4பேர் மீது உதவி ஆய்வாளர் விஜயகுமார் வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்.