தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகிலுள்ள சொக்கன்குடியிருப்பு கிராமத்தில் அதிசயமணல் மாதா திருத்தலம் அமைந்துள்ளது.
இந்த புனித திருத்தலத்தை சுற்றுலா தலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனையடுத்து சுற்றுலா பயணிகளுக்காக காத்திருப்போர் அறை கட்டப்பட்டது. பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று இந்த காத்திருப்போர் அறைதிறப்பு விழா நடைபெற்றது. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இதில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.