தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள தெற்கு இளமால்குளத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (65). அவரது மனைவி அலமேலு(60). இருவரும் சொந்த ஊரில் இருந்து அருகில் உள்ள பேய்க்குளத்திற்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது நாசரேத் அருகே உள்ள வாலசுப்பிரமணிய புரத்தைச் சேர்ந்த கண்ணன், சக்திக்குமார், செல்வின், ராமசந்திரன் நான்கு பேரும் பேய்க்குளத்தில் இருந்து ஊருக்கு சொகுசு காரில் வேகமாக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பேய்க்குளம் அருகே உள்ள பனைக்குளம் அருகே வரும் போது எதிர்பாராத விதமாக தம்பதியினர் சென்ற பைக் மீது மோதியது. இதில் தம்பதியினர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காரில் இருந்த 4 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு 108 மூலம் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாத்தான்குளம் போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.