
சாத்தான்குளம் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்தார்.
சாத்தான்குளம் அருகே ராஜமன்னார்புரத்தை சேர்ந்த வேலாயுதம் மகள் சுதாதேவி (18). இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பி.காம். 2ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று தாய் வீட்டில் உணவு சமைக்கவில்லையென கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுதாதேவி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து தட்டப்பாறை இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.