சாத்தான்குளம் அருகே இளம்பெண் மாயமானார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள செட்டியார்பண்ணை கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். கூலி தொழிலாளியான இவரது மனைவி இசக்கியம்மாள்(30). திருமணமாகி 3 ஆண்டு ஆகிறது. குழந்தை இல்லை. இதனிடையே இசக்கியம்மாள், சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் சற்றுமனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 30ம்தேதி அன்று திசையன்விளை அரசு மருத்துவமனைக்கு செல்வதாக கூறிச்சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் தகவல் இல்லாததால் அவரது கணவர் ராமச்சந்திரன், தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் வழக்கு பதிந்து மாயமான பெண்ணை தேடி வருகிறார்.