
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ளது புத்தன்தருவை. இங்கு வடக்குத்தெருவில் புளியடி முத்தாரம்மன் கோவில் உள்ளது. அந்த கோவில் முன்பு அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த நிலத்தினை வேறு மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் கிராம வருவாய் ஆய்வாளர் மற்றும் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் உதவியுடன் நிலத்தினை அபகரித்து வேலி அமைத்துள்ளதாக தெரிகிறது.
இதனை கண்டித்து இன்று சாத்தான்குளம் வட்டாச்சியர் அலுவலகத்தை புத்தன்தருவை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இந்து முன்னனி அமைப்பினர் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து வட்டாச்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.