சாத்தான்குளம் அருள்மிகு தேவி ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, காலையில் கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, அபிஷேகம், அலங்கார பூஜை, தொடர்ந்து கொடியேற்றம், அன்னதானம், பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. இரவு அலங்கார பூஜை நடைபெற்றது. 4ஆம் திருவிழாவான பிப். 7ஆம் தேதி வருஷாபிஷேகமும், 8ஆம் திருவிழாவான பிப். 11ஆம் தேதி திருவாசகம் முற்றோதுதல், அலங்கார பூஜை, இரவு அருள்மிகு தேவி ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் ரதவீதி உலா வருதல், தொடர்ந்து அன்னதானம் வழங்குதல் நடைபெறுகிறது.
9ஆம் திருவிழாவான பிப். 12ஆம் தேதி மாலையில் திருவிளக்கு பூஜையும், இரவு மாக்காப்பு பூஜையும் நடைபெறுகிறது. 10ஆம் நாளான பிப். 13ஆம் தேதி மகாசிவராத்திரியை முன்னிட்டு இரவு யாகசாலை பூஜையைத் தொடர்ந்து நான்குகால பூஜை நடைபெறுகிறது. நிறைவு நாளான பிப். 14ஆம் தேதி அருள்மிகு ஸ்ரீபேச்சியம்மனுக்கு அபிஷேக பூஜை நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா வி.எஸ்.எம். முருகன் மற்றும் விழாக்கமிட்டியினர் செய்து வருகின்றனர்.