
தூத்துக்குடி பேரணியில் கட்சி தொண்டர்கள் மீது தடியடி நடத்திய போலீஸாரை கண்டித்து, சாத்தான்குளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச் செயலர் அந்தோணிராஜன் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் முருகேசன், கிருஷ்ணன், ஜெயபால், பாலசுந்தரகணபதி, மாவட்டக் குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில், கிளைச் செயலர்கள் மாடக்கண், சங்கரலிலிங்கம், சுப்பையா, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் முருகன், ரவிச்சந்திரன், செயலர்கள் ரமேஷ் அந்தோணி சிலுவைமுத்து, சுடலைமுத்து, சுயம்பு, பால்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.