தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே பண்டாரபுரத்தைச் சேர்ந்தவர் ஜாண்கென்னடி. இவர் கூலி வேலைசெய்து வருகிறார். இவரது மனைவி மல்லிகாசெல்வி. ஜாண் கென்னடிக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகறாறு செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு ஜாண்கென்னடி குடித்து விட்டு வந்து மனைவியிடன் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ஜாண் கென்னடி அருகில் கிடந்த கம்பால் மனைவு மல்லிகா செல்வியை தாக்கியுள்ளார். இதில் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த மல்லிகா செல்வி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மல்லிகா செல்வி உடலை பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவர் ஜாண் கென்னடியை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
=====