சாத்தான்குளத்தில் ஒன்றிய திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
ஒன்றிய அவைத் தலைவர் ஆ. சௌந்திரபாண்டியன் தலைமை வகித்தார். துணைச் செயலர்கள் இரா. சோமசுந்தரி, சக்திவேல், ஆ. பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டப் பிரதிநிதி லெ. சரவணன் வரவேற்றார். கூட்டத்தில் ஒன்றியச் செயலர் ஏ.எஸ். ஜோசப், முன்னாள் மாவட்டப் பிரதிநிதி இ. கெங்கைஆதித்தன் ஆகியோர் பேசினர்.
இதில், புத்தன்தருவை, வைரவம் தருவை குளங்களுக்கு மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கவேண்டும். கன்னடியன் கால்வாய் திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும். உடன்குடியில் அமைய உள்ள அனல்மின்நிலையத்திற்கு பணியாளர்களை சாத்தான்குளம், உடன்குடி பகுதியில் இருந்து தகுதியானவர்களை நியமிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சாத்தான்குளம் கல்விக் கழக நிறுவனர்- தலைவர் கவிஞர் பெ. மு. சுப்பிரமணியம், ஊராட்சி திமுக செயலர்கள் ஜெயராமன், ராஜபாண்டி, முருகேசன், பாலசிங், ராஜ்குமார், ஜெயராஜ், அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஒன்றியப் பொருளாளர் வேல்துரை நன்றி கூறினார்.