சாத்தான்குளத்தில் சேகர அலுவலக கட்டிடத்தை தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத்துக்குள்பட்ட சாத்தான்குளம் சேகர சபைக்கான புதிய அலுவலக கட்டிடம் சேகரகுரு இல்லம் அருகில் புதியதாக கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு திருமண்டல லே செயலாளர் எஸ்டிகே ராஜன் தலைமை வகித்தார். தச்சமொழி டாக்டர் ஆசீர்வாதமனோகரன், திருமண்டல உயர்நிலைக்கல்வி நிலைவரக்குழு செயலர் ஜெபச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேகரத் தலைவர் பாஸ்கர் அல்பர்ட்ராஜன் ஆரம்ப ஜெபம் செய்தார். சேகர செயலர் ராபின்சன்ஆபிரகாம், பொருளாளர் கிங்ஸ்டன் ஹெர்பெட் ஆகியோர் வரவேற்றனர். இதில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் கலந்து கொண்டு புதிய சேகர அலுவலக கட்டிடத்தை ஜெபித்து பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார்.
இதில் சேகரகுருக்கள் ஆனந்தபுரம் டெப்பிள் சாமுவேல்ராஜ், கும்பாபுரம் தேவராஜன், ஆசீர்வாதபுரம் தாமஸ் ரவிக்குமார், அதிசயபுரம் ஜேசு விக்டர், போலையர்புரம் ஞானபிரகாசம், சத்தியநகரம் கிருபாகரன், கிருபாபுரம் எமல்சிங், நெடுங்குளம் ஜான்சன் சாதுசுந்தர்சிங், அன்பின் நகரம் பெஞ்சமின் ஐயாத்துரை, மீரான்குளம் பால்ரத்தினசாமி, திருமண்டல நிர்வாகக்குழு உறுப்பினர் குணசீலன், சாத்தான்குளம் ராஜரத்தினம் கல்வியியல் கல்லூரி தாளாளவ் மாமல்லன், சாத்தான்குளம் டிஎன்டிடிஏ புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி தாளாளர் கிருபாகரன், நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி தாளாளர் சசிகரன், சபை மன்ற செயலர் ராபின், சேகர கமிட்டி நிர்வாகிகள் நெல்சன், ஸ்டீபன் செல்வராஜ், கேசவதாஸ், துரைராஜ், தியோனிஷ், அப்பாத்துரை, கோயில்பிச்சை, ஆனந்தன் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.திருப்பணிவிடையாளர் ஷீபா பாஸ்கர் நன்றி கூறினார்.