
செய்துங்கநல்லூர் அருகே உள்ள சமத்துவபுரம் சமுதாய நலக்கூடத்தில் ச.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது
கருங்குளம் வடக்கு ஒன்றிய தலைவர் முருகன் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.சங்கர், கருங்குளம் தெற்கு ஒன்றிய தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் சடகோபாலன் வரவேற்றார்.
கூட்டத்தில் அனைத்து கிராம பஞ்சாயத்துகள் தோறும் சம.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
ஒன்றிய செயலாளர் முருகன், பொருளாளர் இளையராஜா, ஒன்றிய துணை செயலாளர் முத்துகுமார், ஒன்றிய மாணவரணி செயலாளர் மாரிசுந்தர், கருங்குளம் ஒன்றிய துணை செயலாளர் அந்தோணி சிலுவை, இளைஞரணி செயலாளர் யாக்கோபு உள்பட பலர் கலந்துகொண்டனர். இளைஞரணி செயலாளர் அமல்ராஜ் நன்றி கூறினார்.