தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலெக்டர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். அதில்
இந்த புதிய பாலத்தினை கடந்த நவம்பர் 22ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். சுமார் 45வருட கால கோரிக்கை நிறைவேறிய வகையில் புதிய பாலம் திறந்து வைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் சுற்றுவட்டார விவசாயிகள், மாணவர்கள், கிராமமக்கள் பெரிதும் பயன் அடைந்துள்ளனர். இருந்தபோதும் இந்த பாலத்தில் இதுவரை மின்விளக்கு வசதிகள் செய்து தரப்படவில்லை.
இதனால், இரவுநேரங்களில் மாணவ, மாணவியர்கள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாலத்தின் வழியாக செல்வதற்கு அச்சப்பட்டு வருகின்றனர். மேலும், இங்குள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களின் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம், நாசரேத், தூத்துக்குடி போன்ற பகுதிகளுக்கே சென்று வருகின்றனர். இந்நிலையில், புதிய பாலத்தின் வழியாக கொங்கராயகுறிச்சியில் இருந்து திருநெல்வேலி சந்திப்பு, ஸ்ரீவைகுண்டம், போன்ற பகுதிகளுக்கு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டால் இப்பகுதி கிராமமக்கள் அனைவரும் பெரிதும் பயன்பெறுவார்கள்.