கொங்கராயகுறிச்சியில் ஷரியத் சட்ட விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடந்தது.
கொங்கராயகுறிச்சி முகைதீன் ஜீம்ஆ மஸ்ஜித் முன்புறம் நடந்த கூட்டத்தில் முதல் அமர்வு நடந்தது. ஆறாம்பண்ணை அன்னை ஆயிஷா மகளிர் கல்லூரி இமாம் முகம்மது அனீபா தலைமை வகித்தார். கொங்கராயகுறிச்சி இமாம் அபூபக்கர் சித்தீக் அறிமுக உரை நிகழ்த்தினார். உடன் குடி வட்டார ஜமா அத்துல் உலமா சபை தலைவர் ஜபார் சாதிக் , பேட்மாநகரம் நூருல் ஈமான் இஸ்லாமிய மகளிர் கல்லூரி முதன்மை பேராசிரியர் லியாகத் அலி, தூத்துக்குடி மாவட்ட ஜமா அத்துலு உலமா சபை துணை செயலாளர் அப்துல் கப்பார் கான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாலை 5 மணிக்கு இளைஞர் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாணவர்கள் சூளை வாய்க்கால் முகம்மது அப்ளல், கொங்கராயகுறிச்சி முகம்மது முஹ்சின், ஆறாம்பண்ணை அமீர் ஹீஸைன் ஆகியோர் பேசினர்.
இரண்டாவது அமர்வுக்கு கொங்கராயகுறிச்சி முகைதீன் ஜும் ஆ மஸ்ஜித் தலைவர் அப்துல் காதர் தலை¬மை வகித்தார். பேட்மாநகரம் நூருல் ஈமான் இஸ்லாமிய மகளிர் கல்லூரி முதல்வர் சித்தீக், காங்கராயக்குறிச்சி சுன்னத் ஜமா அத் இளைஞரணி பொறுப்பாளர் முகம்மது இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட ஜமா அத்துலு உலமா சபை செயலாளர் அப்துல் அழீம்,பேட்மாநகரம் நூருல் ஈமான் இஸ்லாமிய மகளிர் கல்லூரி பேராசிரியர் முகைதீன் அப்துல் காதிர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி பேராசிரியர் முகம்மது இஸ்மாயில் சிறப்புரையாற்றினார்.
மூன்றாவது அமர்ந்த இரவு 8 மணிக்கு நடந்தது. ஸ்ரீவைகுண்டம் வட்டார ஜமா அத்துலு உலமா சபை தலைவர் அப்துல அஜீஸ் தலை¬ வகித்தார். தூத்துக்குடி மாவட்ட ஜமா அத்துலு உலமா சபை தலைவர் முகம்மது பாரூக் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி அம்ஜத் அலி, கோவில்பட்டி ஜமா அத்துலு உலமா சபை தலைவர் முகம்மது ஹனீப், மாநில ஜமா அத்துலு உலமா சபை பொருளாளர் முஜிபுர் ரகுமான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பெங்களூர் சபீலுர் ரஷாத் பேராசிரியர் ஸைபுத்தீன் ரஷாதி சிறப்புரை ஆற்றினார். நிகழச்சியை ஆறாம்பண்ணை இமாம் அப்துல் காதிர் தொகுத்து வழங்கினார். ஸ்ரீவைகுண்டம் வட்டார ஜமா அத்துல உலமா சபை செயலாளர் ஹஸன் ஞானியார், தூத்துக்குடி ஜமா அத்துல் உலமா சபை மாநகர தலைவர் நூருல்லாஹ் ஆகியோர் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ வைகுண்டம் வடட்£ர ஜமா அத்துல் உலமா சபையும், கொங்கராயக்குறிச்சி சுன்னத் வல்ஜமாஅத் இளைஞரணியும் இணைந்து செய்திருந்தது.