கொங்கராயகுறிச்சியில் மேலும் ஒரு செல் டவர் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கொங்கராயகுறிச்சியில் ஆழ்வார்கற்குளம் செல்லும் வழியில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இரண்டு செல்போன் டவர் அமைக்கப்பட்டது. இந்த செல்போன் டவர் அமைக்கப்பட்ட பின்பு இந்த பகுதியில் உள்ள பறவைகள் பாதிக்கப்பட்டன. சிட்டு குருவி போன்ற உயிரினங்கள் அழிந்து விட்டன. மேலும் பெண்களுக்கு கருச்சிதைவு போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றது. எனவே இந்த செல்போன் டவரை அகற்ற வேண்டும என பொது மக்கள் கோரி வந்தனர். இதற்கிடையில் மிகவும் பவர் வாய்ந்த மற்றொரு டவரை இந்த பகுதியில் கடந்த மாதம் அமைத்து விட்டனர்.
இதுகுறித்து கொங்கராயகுறிச்சியை சேர்ந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருங்குளம் ஒன்றிய குழு உறுப்பினர் கண்ணன் கூறும் போது, இயற்கனவே செல்போன் டவர் அமைத்த போது நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் யாரும் கேட்கவில்லை. இதற்கிடையில் தற்போது மேலும் பவர் வாய்ந்த மற்றொரு டவரை அமைத்துள்ளார்கள். இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த பகுதியில் உள்ள டவரை உடனே அகற்றி ஊருக்கு ஒதுக்குபுறத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மக்களுக்கு பிரச்சனை ஏற்படுத்தக்கூடிய இந்த டவரை மற்றுமொரு இடத்துக்கு மாற்றி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.