கொங்கராயகுறிச்சி பொன்னுறுதி சமேத வீரபாண்டீஸ்வரர் ஆலயத்தில் சட்டநாதர் மிகவும் விசேஷமானவர். 64 பைரவர்களை உள்ளடக்கிய சட்டநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி விழா மிகச்சிறப்பாக நடைபெறும். நேற்று இந்த விழா கொங்கராயகுறிச்சி சட்டநாதர் ஆலயத்தில் நடந்தது. இதையொட்டி வருகிற தை மாதம் கோயில் கும்பாபிசேகம் நடத்த ஆயத்த பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி தாமிரபரணி மகா புஷ்கரம் 2018 அக்டோபர் 11முதல் 23 தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி தாமிரபரணி மடகா புஷ்கர கமிட்டியும், அகில பாரதிய துறவியர்கள் சங்கமும்இணைந்து தாமிரபரணி புஷ்கரம் ஏற்பாடு செய்துவருகிறது. இதில் தாமிரபரணி புஷ்கரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாபநாசம் முதல் புன்னகாயல் வரை தாமிரபரணி அன்னை அகத்திய பெருமான் சிலை தாங்கிய ரதம் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த துறவிகளும் கோயில் வளாகத்துக்கு வந்து சேர்ந்தனர். அவர்களும் கோயிலில் சிறப்பு அபிசேகத்தில் கலந்துகொண்டனர்.
ஓய்வு பெற்ற ஐ.ஜி மாசன முத்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு பக்தர்கள் மத்தியில் சொற்பொழிவு ஆற்றினார். துறவிகள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை இராமாந்தா சுவாமிகள், சேலம் சித்வேஸ்வரா சுவாமிகள், பொள்ளாச்சி வேதாந்தா சுவாமிகள், மன்னார்குடி ஜீயர் சுவாமிகள், பழனி மெய்தவம் அடிகள், கோயம்புத்தூர் ஜீயர் சுவாமிகள் காரைக்கால் வீரப்பிள்ளை சுவாமிகள், ஈரோடு சரவணாந்தா சுவாமிகள், மதுரை அபயானந்தா சுவாமிகள், புதுக்கோட்டையோகி சிவபிரம்மானந்தா சரஸ்வதி சுவாமிகள், சென்றை மாதா ஞானேஸ்வரி கிரி, மதுரை வித்யாம்பா சரஸ்வதி மாதாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அஷ்டமி பூஜையை முன்னிட்டு சிறப்பு அபிசேகம்,அலங்காரம், ஆராதனை நடந்தது. பஞ்ச வாத்தியம் முழங்க சிறப்பு பூஜை நடந்து பிரசாதம் வழங்கப்பட்டது.
சட்டநாதர் வழிபாட்டு குழுவை சேர்ந்த உலகநாதன், இசக்கி காட்டுராஜன், வெள்ளூர் துரை, மாறன், மகளிர் குழுவை சேர்ந்த சாந்தி , அசுதி உள்பட பலர் செய்திருந்தனர்.