சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு புதிய நீதிபதியாக டி. சரவணன் பொறுப்பேற்றார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள, சாத்தான்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்து வந்த செல்வன்ஜேசுராஜ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணிமாறுதலிலில் சென்றார். அதன்பிறகு குற்றவியல் நீதிபதி நியமிக்கப்படாததால் பொறுப்பு நீதிபதிகள் வந்து வழக்குகளை விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் சாத்தான்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக டி. சரவணனை நியமித்து நீதித்துறை அறிவித்தது. இதையடுத்து புதிய நீதிபதி நேற்று பொறுப்பேற்றார். புதிய நீதிபதி சரவணனுக்கு சாத்தான்குளம் வழக்கறிர்கள் சங்கத் தலைவர் ராம்சேகர் தலைமையில் வழக்கறிர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.