

மதியம் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் விநாயகர், அம்மன், நாராயணர், பெரியசாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புஷ்ப அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பெரியசாமி சன்னதிக்கு மேல்புறம் உள்ள முப்பிடாதி அம்மன் கோவில் முன்பு மஞ்சள், குங்குமம், சந்தனம், மாவிலை, புஷ்ப அலங்காரத்துடன் கூடிய காலை குரங்கணி 60 பங்கு நாடார்கள் நட்டினர். தொடர்ந்து திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கொடை விழா தொடங்கியதும் பக்தர்கள் விரதத்தை தொடங்கினர். விழாவையொட்டி ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சகாய ஜோஸ் மேற்பார்வையில், ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மகுமாரி தலைமையில், நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் அஜித் மற்றும் குரங்கணி 60 பங்கு நாடார்கள், சென்னைவாழ் குரங்கணி நாடார் சங்கத்தினர், கோவைவாழ் குரங்கணி நாடார் சங்கத்தினர் செய்து வருகின்றனர்.