திருத்தி அமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டம், தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு இணைந்து கீழ வல்லநாடு ராஜா கம்பேனியில் உள்ள பணியாளர்களுக்கு காசநோய் கண்டறியும் முகாம் நடத்தினர். மாவட்ட நலக் கல்வியாளர் தங்கவேல் தலைமை வகித்தார். வட்டார சுகாதர மேற்பார்வையாளர் பெரியசாமி , மருத்துவமல்லா மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கம்பேனி மேலாளர் விஜயகுமார் வரவேற்றார். மருத்துவ அலுவலர்கள் டாக்டர் முகம்மது கனி, சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
நிகழ்ச்சியில் முதுநிலை ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் இளையராஜா, நம்பிக்கை மைய ஆற்றுனர் ஐயம்மாள், செவிலியர் சுப்பு லெட்சுமி, ஆய்வக நுட்பர் செல்வி, வேல்கனி, அழகம்மாள், தம்பான் மற்றும் சுகாதார துறை பணியாளர்கள் கலந்துகொண்டனர். வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனார். கீழ செக்காரகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் செய்யது பரீத் நன்றி கூறினார்.