கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
முகாமிற்கு, சித்த மருத்துவர் செல்வக்குமார் தலைமை வகித்தார். பேராசிரியர் அண்ணாத்துரை, துணை பேராசிரியர் ராஜபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ராமலிங்கம் மாணவர்கள், பேராசிரியர்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கி முகாமினை துவக்கி வைத்தார்.
மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்த சிறப்பு சித்த மருத்துவ முகாமில் சுமார் 400 மாணவ, மாணவியர்கள், பேராசிரியை&பேராசிரியர்கள், கல்லூரி பணியாளர்கள் என 500க்கும் மேற்பட்டவர்களுக்கு தினமும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
இதில், உதவி பேராசிரியர்கள் சம்பத்குமார், குமார், கண்காணிப்பாளர் ராஜசேகர், உதவி கணக்கு அலுவலர் மாணிக்கவாசகம், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் உறைவிட மருத்துவர் அஜீமா தஸ்லின் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவப்பிரிவும், கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியும் இணைந்து நடத்திய டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் மற்றும் சிறப்பு சித்த மருத்துவ முகாம் கல்லூரியில் நடைபெற்றது.


