கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் இந்திய தேசிய விமானப்படையின் துல்லிய தாக்குதல் தினம் கொண்டாப்பட்டது.
கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி கலையரங்கத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு விங் கமாண்டர் இராஜகோபால் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் இராஜாபாபு முன்னிலை வகித்தார். இரண்டாம் ஆண்டு நாட்டு நலப்பணி திட்ட மாணவி சுகுணா வரவேற்றார். நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் ஆண்டரியா, ஆனியா ஜார்ஜ், சாய்வள்ளி, ஹர்சினி, கஸ்தூரி, கோகுல தர்ஷினி, கனிமொழி, முல்லை, ஐஸ்வர்யா உள்ட பலர் பேசினர். கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் வேணுதேவன், தீனதயாளன் ஆகியோர் பேசினர்.
இந்திய தேசிய விமானப்படையின் துல்லிய தாககுதல் நிகழ்வை அனுசரிககும் பொருட்டு மாணவ மாணவியரிடையே நடத்தப்பட்ட கவிதை கட்டுரை ஒவியப் போட்டிகளில் வென்ற மாணவ மாணவியர்களுககு பரிசு வழங்கப்பட்டது. மாணவி ஹர்சினி நன்றி கூறினார்.


