கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி சார்பில் மாணவிகளுக்கு பூ கட்டும் போட்டி மற்றம் பயிற்சி நடந்தது.
இதற்காக போட்டியாளர்கள் வசம் மல்லிகை பூ கொடுக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் அழகாய் பூ கட்டி முடித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முதல் பரிசை சரண்யா, பிரியதர்ஷினி ஆகியோர் பெற்றனர். இரண்டாம் பரிசை தீப்தி பெற்றார். மூன்றாம் பரிசு கீர்த்தனா பெற்றார்.
அதன்பின் அனைத்து நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகளுக்கும் பூ கட்ட கற்றுகொள்ளும் விதமாக ஐந்து பேர் கொண்ட பன்னிரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவிற்கும் பூ கட்டத் தெரிந்த பன்னிரண்டு மாணவிகள் பயிற்றுனராக நியமிக்கப்பட்டனர். அதன் பின் பூக்கட்டும் பயிற்சி நடந்தது. இதில் ஏராளமான மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கிள்ளிகுளம் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் ராஜாபாபு, முனைவர் சோபா ஆகியோர் செய்திருந்தனர்.