கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் ரெட் ரிப்பன் கிளப் அமைப்பும் இணைந்து கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மாணவர்களிடையே எச்.ஐ.வி. மற்றும் போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
எச்.ஐ.வி. குறித்த விழிப்புணர்வு மற்றும் போதை பழக்கங்களின் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மாணவ மாணவிகளிடையே ஏற்படுத்தும் விதமாக எச்.ஐ.வி பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் முனைவர் இராமலிங்கம் தலைமை வகித்தார். நெல்லை மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பின் மேற்பார்வையாளர் ஜெயக்குமார், ஆலோசகர் ஞானதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாட்டு நலப்பணிதிட்ட அலுவலர் முனைவர் சோபா வரவேற்றார். கிள்ளிகுளம் வேளாண்கல்லூரி மருத்துவர் அஜீமா தஸ்லீன், உழவியல் துறை தலைவர் பேராசிரியர் முனைவர் இராமநாதன், நெல்லை மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பின் மேற்பாற்வையாளர் ஜெயக்குமார் ஆலோசகர் ஞானதுரை ஆகியோர் பேசினர். கிள்ளிகுளம் வேளாண்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் இராஜாபாபு நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேளாண்மை கல்லூரி நாட்டு நலப்பணிதிட்ட அலுவலர்கள் முனைவர் இராஜாபாபு, முனைவர் சோபா ஆகியோர் செய்திருந்தனர்.