கிள்ளிகுளம் வேளாண்மை பல்கலைக்கழகம் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நாட்டுநலப்பணித்திட்ட சார்பாக பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டையில் துப்புறவு பணி நடந்தது.
நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் ராஜாபா தலைமை வகித்தார். கோட்டையின் நிர்வாகி ஓண்டிவீரன் முன்னிலை வகித்தார். முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு நாட்டுநலப்பணித் திட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். அதன் பின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பெருமையை அறிந்து கொள்ளும் வண்ணம் ஓட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சிதம்பரானார் பிறந்த இல்லத்தினை அவர்கள் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் முனைவர் ராமலிங்கம், தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா அலுவலர் சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.