கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் நாட்டுநலப்பணித்திட்டம் மூலமாக 4ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
கல்லூரி முதல்வர் ராமலிங்கம் தலைமை வகித்தார். திருநெல்வேலி உலக சமுதாய சேவா சங்கத்தின் யோகா பயிற்றுநர்கள் அரசு ஈசுவரன், சங்கர சிவ சுப்பிமணியம் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு யோகாசனங்களை பயிற்றுவித்தார். திரளான கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பல்வேறு யோகாசனங்களையும் மற்றும் மனவளக்கலை பயிற்சிகளையும் கற்றுக் கொண்டனர்.
கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் இராஜாபாபு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.