கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் சார்பில் இராமனுஜம்புதூரில் சிட்டுகுருவி தினம் கொண்டாடப்பட்டது.
உலக அளவில் அழிந்து வரும் சிட்டுகுருவி இனத்தினை காக்கும் பொருட்டு நடந்த முகாமிற்கு கல்லூரி முதல்வர் ராமலிங்கம் தலைமை வகித்தார். அதன் பின் சிட்டுககுருவியை பாதுகாக்க வேண்டிய முயற்சிகள் ஏற்படுத்தப்பட்டது. இதற்காக செயற்கை கூடுகள் அமைககப்பட்டு இராமனுஜம்புதூர் பகுதியில் பொறுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி நாட்டு நலப்பணிதிட்ட அலுவலர் முனைவர் ராஜாபாபு கூறும் போது, பெரும்பாலுமே சிட்டுகுருவி இனம் வனப்பகுதிகளில் வாழ்வதை விட மனிதர்களுடன் நெருங்கி இருககவே விருப்ப படுகிறது. பொதுவாக வீட்டு மாடம், பரண், ஓடுகளின் இடைவெளி போன்ற இடங்களில் கூடு கட்டி வசித்து வந்தன. இப்போது கான்கீரிட் மற்றும் அடுககு மாடி கட்டிடம் அதிகரிப்பால் நகரங்களில் இருந்து விடைபெற தொடங்கி விட்டது. தற்போது சிட்டு குருவி அழிவின் விளிப்பில் உள்ளது. எனவே இதனை காப்பாற்ற நடவடிககை எடுத்து வருகிறோம். அட்டைப்பெட்டியில் வைககோலை வைத்து வீட்டு வராந்தாவிலோ, பால்கனிகளிலோ அல்லது மரத்திலோ தொங்கவிட்டால் கூட சிட்டுக் குருவிகளுக்குப் போதுமாமனது.
சிட்டுகுருவி இனத்தைப் பாதுகாககும் பொருட்டு கிள்ளிகுளம் நாட்டுநலப்ணித்திட்ட மாணவ மாணவிகளால் செயற்கை அட்டைபெட்டி அமைககப்பட்டு கல்லூரி வளாகம், மரங்கள், விடுதிகள், மா£ணவர்களின் உணவகங்கள், இராமனுஜம்புதூர் கிராம பகுதியில் உள்ள மரங்களில் பொருத்தி வருகிறோம். என கூறினார்.
இந்த முகாமில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.


