செய்துங்கநல்லூர் அருகே உள்ள கிளாக்குளத்தினை சேர்ந்தவர் இராமசந்திரன் மகன் கண்ணன்(48). ரியல்எஸ்டேட் அதிபராக உள்ளார். இவர் இன்று காலை 10 மணி அளவில் அவரது வீட்டில் இருந்துள்ளார். அப்போது ஒரு காரில் மூன்று பேர் வந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்தார் கண்ணனை அக்கம் பக்கத்தில் இருந்து ஓடி வந்தவர்கள் மீட்டனர். மேலும் தாக்கிய மூன்று பேரையும் வீட்டுக்குள் பூட்டி வைத்தனர். அதன்பின் போலிசுக்கு தகவல் கூறினர்.
செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன், சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கண்ணனை 108 வாகனத்தில் ஏற்றி சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கண்ணன் ரத்தம் சொட்ட சொட்ட 108 ல் ஏற்றப்பட்டதும், பூட்டிய வீட்டுக்குள் இருந்த மூன்று பேரை பொதுமக்கள் தாக்க முயற்சி செய்தனர். போலிசார் அவர்களை சமரசம் செய்தனர்.
அதன் பின் பூட்டிய வீட்டுக்குள் இருந்து மூன்று பேரையும் போலிசார் மீட்டனர். அதில் கயத்தாற்றை சேர்ந்த பரமசிவன் மகன் மகராஜன்(24), ஆறுமுகநேரி பெருமாள்புரத்தினை சேர்ந்த பலவேசம் மகன் அக்ரிபெருமாள்(55), அவரது மகன் ராஜ்குமார்(28) ஆகியோரையும் காரை ஓட்டி வந்த ஆறுமுகனேரியை சேர்ந்த ஜெயராஜையும் போலிசார் விசாரித்தனர்.
இதற்கிடையில் போலிசார் நடத்திய விசாரணையில் கண்ணன் மகாராஜனிடம் ஏ.பி.ஆர்.ஓ வேலை வாங்கி தருவதாக கூறி 9 லட்சம் வாங்கியதாகவும், வேலை கிடைக்காத காரணத்தினால் பல முறை கேட்டும் முறையான பதில் கூறாத காரணத்தினால் தனது உறவினர் அக்ரிபெருமாள், ராஜ்குமார் ஆகியோருடன் வந்து பணத்தினை கேட்டதாகவும், அதில் ஏற்பட்ட பிரச்சனையில் கண்ணனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கண்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்குபதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் சோமன்ராஜ், மகாராஜன் உள்பட மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு கைது செய்தார்.